கான் சிட்டி ரிலீஸ் தேதி வெளியீடு
கான் சிட்டி ரிலீஸ் தேதி வெளியீடு
அர்ஜூன் தாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் கான் சிட்டி. பவர் ஹவுஸ் பிச்சர்ஸ் தாரித்துள்ள இந்த படத்தை ஹரிஷ் துரைராஜ் என்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ளார்.
கான் சிட்டியில் அர்ஜூன் தாஸுடன் அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். கடனில் சிக்கி தவிக்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதருக்கு பட்டன் தட்டினால் பணம் கொட்டும் இயந்திரம் ஒன்று கிடைக்கிறது. அதனை வைத்து அந்த குடும்பம் என்ன செய்கிறது என்பதுதான் இப்படத்தின் மையக்கதை. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் யூடியூபில் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.
இந்த நிலையில் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இது குறித்த அறீவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
