கரன்ட் கட் பிரச்னையை கையிலெடுத்த கான் சிட்டி?.. அர்ஜுன் தாஸ் புதுப்பட டிரைலர் எப்படி இருக்கு?..
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கான் சிட்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று ஜூன் 20, 2026 மாலை 5 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், நகர வாழ்க்கையில் கடன்சுமையால் போராடும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ட்ரெய்லரின் தொடக்கத்தில், பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை காட்டப்படுகிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் திடீரென கிடைக்கும் ஒரு மர்மமான பண மிஷின் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது. அந்த மிஷினில் ஒரு பட்டனை அழுத்தினால் பணம் கொட்டத் தொடங்குவது போன்ற காட்சிகள் ரசிகர்களின் ஆச்சரியத்தை தூண்டுகின்றன.
இதனைத் தொடர்ந்து நகைச்சுவை, குழப்பம் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்த காட்சிகள் இடம் பெறுகின்றன. உணர்ச்சிகரமான குடும்பக் கதையாக தொடங்கும் ட்ரெய்லர், பின்னர் முழுமையான காமெடி என்டர்டெயினராக மாறி சுவாரஸ்யமான முறையில் நிறைவடைகிறது.
இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவூஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஷான் ரோல்டன் இசையமைத்திருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
#Concity Trailer 👍 https://t.co/Gcroku0QI4
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 20, 2026
பவர் ஹவுஸ் தயாரிப்பு என்பதால் என்னவோ படத்தில் கரன்ட் கட் பிரச்னையை இயக்குநர் வைத்து விளையாடியுள்ளார் என்று தெரிகிறது. மக்கள் தலைவா படத்திலேயே விஜய்க்கு எதிரான பிரச்சாரம் இருந்ததால் அந்த படம் வந்ததே தெரியவில்லை. அதுபோல எதுவும் சர்ச்சை வெடித்தால் படத்துக்குத்தான் ஆபத்து என்கின்றனர்.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக "பட்டன் அழுத்தினால் பணம் கொட்டும் மிஷின்" என்ற புதுமையான கற்பனை கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
கான் சிட்டி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரைப் பார்க்கும்போது, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
கான் சிட்டி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரைப் பார்க்கும்போது, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
