Categories: Cinema News latest news

காண்டம் விற்க தயாரான RRR படக்குழு.! என்ன ராஜமௌலி இதெல்லாம்.?!

ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் RRR. இந்த திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியானது. அதனை தொடர்ந்து,  இப்படத்தை வைத்து பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவன விளம்பரத்திற்காக RRR குழுவுடன் ஒப்பந்தம் செய்து அதனை செயல்படுத்தி வருகின்றனர்.

அதில் ஒரு காண்டம் ( ஆணுறை ) கம்பெனியும் உண்டு . அந்த கம்பெனி தற்போது அதன் விளம்பர வேலைகளை ஆரம்பித்துள்ளது. அதில், RAW  RESPOSIBLE ROMANCE என விளம்பரடப்படுத்தி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் எவ்வளவு நல்ல படம் அதனை வைத்து காண்டம் விளம்பரம் செய்கிறார்களே என புலம்பி வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் –  கதை சொன்னது நம்மகிட்ட!…அட்வான்ஸ் கமலுக்கா?!.. ரஜினியை அப்செட் ஆக்கிய இயக்குனர்…

இப்படம் ஹிந்தியில் 100 கோடியை தாண்டியுள்ளது. மொத்தமாக 600 கோடி வசூலை தாண்டி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பட வசூல் 800 கோடி வரும் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் தான் தெரியும் இன்னும் எத்தனை கோடி வசூல் வரப்போகிறது என்று.

Manikandan
Published by
Manikandan