×

மாநாடு ஷூட்டிங் கேன்சல்… சிம்புவை கேலி செய்த மீம்ஸ்கள் – தயாரிப்பாளர் பதில் !

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டதால் அவரைக் கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன

 

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த மாநாடு திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டதால் அவரைக் கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் தொடங்கிய மாநாடு திரைப்படம் கொரோனா பீதியால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் நடந்துவந்த எல்லா படப்பிடிப்புகளும் இதனால் நிறுத்தப்பட்டு விட்டன.

இந்நிலையில் ஷூட்டிங் கேன்சல் ஆனதால் சிம்பு மிகவும் ஜாலியாக இருப்பார் என்பது போல பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள்மாநாடு’’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News