×

ஏழு பேர் விடுதலை விவகாரம்: காங்கிரஸ் - திமுக கருத்து மோதல்?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கருத்து மோதல்

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை அரசியல் கட்சிகள் விடுவிக்க சொல்வது ஏற்புடையது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

அந்த அறிக்கையில், ஓர் நாட்டின் பிரதமரை கொலை செய்த நபர்களை கொலை காரர்கள் என அழைக்காமல், தமிழர்கள் என அழைப்பது தமிழர் பண்பாடு இல்லை எனும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஏழுபேரை விடுவித்தால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என ராகுல் காந்தி ஒரு முறை சொல்லியிருந்தார், அவர்களின் குடும்பம் 7 பேரை மன்னித்துவிட்டதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

இப்படி இருக்கையில், தேர்தல் வரும் நேரத்தில், ஏழ்வர் விடுதலை குறித்து அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இப்படி ஒரு அறிக்கை விடுத்துள்ளது திமுக உடனான கூட்டணியில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில், காங்கிரஸின் இந்த கருத்து, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தயுள்ளது. திமுக இந்த விவகாரத்தை எப்படி பார்க்கப்போகிறது, காங்கிரஸ் திமுகவிற்கு கொடுத்துள்ள ஓர் சமிக்கை தானா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News