Categories: Cinema News latest news

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இண்டர்நேஷ்னல் கிரஷ் நடிகை….!

அறிமுகமான முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் அந்த இளம் நடிகை. முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய அந்த நடிகை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது திருமணத்தையே நிறுத்தினார்.

மேலும் அவர் எதிர்பார்த்ததை போல அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. அனைத்து மொழிகளிலும் நடிகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் நடிகையின் மார்க்கெட் நாளுக்கு நாள் உச்சம் தொட்டது. மேலும் அவரது க்யூட்டான முகபாவனைகள் காரணமாக ரசிகர்கள் அவரை எக்ஸ்பிரஷன் குயின் என்றே அழைத்து வந்தார்கள்.

இப்படி நாளுக்கு நாள் பிரபலமாகி வந்த அந்த நடிகையின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை படைத்ததால் நடிகை தற்போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ஒரு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

அதுவும் ஒரு பெரிய இயக்குனர் படம். பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் தற்போது அக்கட தேசத்தில் புதிதாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். தனது படத்தை பிரமாண்டமாக காட்ட ஒரு சில காட்சிகளுக்கே பணத்தை வாரி இறைத்து வருகிறாராம். இந்த படத்தில் ஏற்கனவே ஹீரோயின் முடிவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இந்த நடிகையை அணுகியுள்ளனர்.

தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் கெத்து காட்டிய நடிகை பல கண்டிஷன்களை போட்டாராம். அதாவது முதல் ஹீரோவின் அளவுக்கு சம்பளம் வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் தான் கேட்கும் வசதிகளை செய்து தர வேண்டும் என பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே சென்றுள்ளார்.

இதனால் கடுப்பான பிரம்மாண்ட இயக்குனர் அந்த நடிகையே வேண்டாம் என கூறி விட்டாராம். தானாக தேடி வந்த நல்ல வாய்ப்பை இப்படி தன் வாயாலே கெடுத்து கொண்டோமே என நடிகை புலம்பி வருகிறாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini