×

ஜகத்தினில் நீ கர்ணனாய் தோன்ற வாழ்த்துகிறேன் –தனுஷுக்கு லெஜண்ட்டின் வாழ்த்து!

தமிழ் சினிமாவின் இளைய கமலஹாசனாக உருவாகி வரும் தனுஷுக்கு நடிகர் வடிவேலு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

தமிழ் சினிமாவின் இளைய கமலஹாசனாக உருவாகி வரும் தனுஷுக்கு நடிகர் வடிவேலு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று தனுஷிம் 37 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி வடிவேலு தன்னுடைய டிவிட்டரில் ‘தமிழ் சினிமாவின் மீது காதல் கொண்டு, புதுப்பேட்டையில் படிக்காதவனாய் வலம் வந்து வேலையில்லா பட்டதாரியாய் கொடி நாட்டி வட சென்னையில் நீ அசுரனாய் மாறிய போது நம் மக்களைப் போல் நானும் மகிழ்ந்தேன். இந்த ஜகத்தினில் நீ கர்ணனாய் தோன்ற வாழ்த்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார். வடிவேலுவும் தனுஷும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. படிககாதவன் படத்தில் முதலில் வடிவேலுதான் நடிப்பதாக இருந்தது. இதற்காக சில நாட்கள் படப்பிடிப்பிலும் அவர் கலந்துகொண்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் வெளியேற, அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தில் விவேக் நடித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News