×

கர்ப்பமானதை அறிவித்த பிக்பாஸ் காதல் ஜோடி - குவியும் வாழ்த்துக்கள்!

மலையாள பிக்பாஸ் சீசன் 1  நிகழ்ச்சியில் பெரும் பிரபலமான காதல் ஜோடி பியர்ல் மானே ( Pearle Maaney ) மற்றும் ஸ்ரீனிஷ் ( Srinish Arvind ). சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே ஸ்ரீனிஷ் அரவிந்த் என்பவரை பிக்பாஸ் செட்டில் சந்தித்து அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு காதலை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள்.

 

இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.  நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையில் சேர்ந்தது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் தற்ப்போது பியர்ல் மானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து. எங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள் என கூறி பதிவிட்டுள்ளார். இதையடுத்து பியர்ல் மானே - ஸ்ரீனிஷ் அரவிந்த் ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News