Categories: Cinema News latest news

11 கோடிக்கு கான்ஜூரிங் பேய் வீடு.! ஆனால், அது மட்டும் செய்ய கூடவே கூடாதாம்.!

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமா அளவில், பிராந்திய மொழி (அந்தந்த மாநில மொழி) திரைப்படங்களுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் வெளிநாட்டு படங்கள் குறிப்பாக ஹாலிவுட் படங்கள் வந்து பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து விடும்.

அதில், ஆக்சன் அட்வென்சர் படங்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் இருக்கிறதோ அதே அளவு திகில் படங்களுக்கும் மவுசு அதிகமாகவே இருக்கிறது. ஈவில் டெத் சீரிஸ், IT வரிசையில் திகில் ஊட்டிய திரைப்படம் கான்ஜுரிங்

இந்த திரைப்படம் இதுவரை 3 பாகங்களாக வெளியாகியுள்ளது. 1971 முதல் 1980 வரையில் 63 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட அமானுஷ்ய உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் கான்ஜுரிங் படங்கள் எடுக்கப்பட்டதாம்.

இதையும் படியுங்களேன் – விஜய் படத்தலைப்பு திடீர் மாற்றம்.!? எல்லாத்தும் காரணம் ஜி.வி.பிரகாஷாம்.! இந்த கதை தெரியுமா.?!

அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட மாகாணத்தில் இந்த பண்ணை வீடு இன்னும் இருக்கிறதாம். அண்மையில் இந்த வீட்டு ஓனர் இதனை விற்றுள்ளார். அப்போது இந்த வீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 கோடிக்கு விலை போய்யுள்ளளது. ஆனால், ஒரு கண்டிஷன் போட்டு தான் விற்றுள்ளாராம். இந்த வீட்டை வாங்குவதோடு சரி வீட்டில் யாரும் தாங்கி இருக்க கூடாது என கண்டிஷன் போட்டு தான் வீட்டை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Manikandan
Published by
Manikandan