×

புதையலுக்காக பெண்ணை நரபலிக் கொடுக்க சதி! 2020 லும் இப்படியா?

ஆந்திராவில் புதையல் எடுக்கவேண்டும் எனபதற்காக வாய் பேச முடியாத பெண் ஒருவரை அவரது உறவினர்களே நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திராவில் புதையல் எடுக்கவேண்டும் எனபதற்காக வாய் பேச முடியாத பெண் ஒருவரை அவரது உறவினர்களே நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரபலி கொடுப்பதெல்லாம் வழக்கொழிந்து போன சடங்கு என சொல்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த நவீன காலத்திலும் வாய்பேச முடியாத பெண் ஒருவரை பலி கொடுத்து புதையல் எடுக்க திட்டமிட்டுள்ளது ஒரு கும்பல். ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் புதையல் எடுப்பதற்காக சரஜம்மா என்ற வாய்பேச முடியாத பெண்ணை அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

அங்கு பூஜை ஏற்பாடு எல்லாம் செய்யப்பட்டுள்ளதைப் பார்த்து புரிந்துகொண்ட சரஜம்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அலறியுள்ளார். இதனால் அக்கம்பக்கம் கிராமத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து பார்த்து அந்த கொடூர செயலை நிறுத்தியுள்ளனர். மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து சரஜம்மாவின் உறவினர்கள் அங்கிருந்து ஓடி தலைமறைவாகியுளனர். இதன் பின்னர்  சராஜம்மாவின் மகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர். புரம் போலீசார் தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News