தொடர்ந்து சாதனை படைக்கும் சூரரைப் போற்று... இந்த முறை இப்படி ஒரு சாதனையா?
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம், கடந்த நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பல்வேறு முந்தைய சாதனைகளை 'சூரரைப் போற்று' உடைத்து வருகிறது.
Thu, 17 Dec 2020

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
சூரரைப் போற்று ட்விட்டரில் அதிகம் பதிவிடப்பட்ட படம், கூகளில் அதிகம் தேடப்பட்ட படமென தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இதில் அடுத்த புதிய சாதனையாக, ராம் சினிமாஸ் சார்பாக நடத்தப்பட்ட விருப்பமான திரைப்படத்திற்கான வாக்கெடுப்பில் 97.4 ஆயிரம் வாக்குகள் பெற்று 'சூரரைப் போற்று' முதல் இடம் பிடித்திருக்கிறது.