×

ஐபிஎல்-க்கும் ஆப்பு வைக்குமா கொரோனா வைரஸ் – கையை பிசையும் பிசிசிஐ!

கொரோனா வைரஸ் பீதி இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பீதி இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் பரவல் இன்று உலகின் 6 கண்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 3387 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என பலநாட்டு அரசுகளும் அறிவித்து அதன் படி பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளால் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகும் என்பதால் ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி அதுகுறித்து விளக்கமளித்துள்ளார். உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல்களுடன் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News