×

சர்ச்சையைக் கிளப்பிய காட்மேன் சீரிஸ் வெளிவராது – தயாரிப்பு நிறுவனம் உறுதியளிப்பு!

சர்ச்சையைக் கிளப்பிய காட்மேன் சீரிஸ் ஜீ 5 தளத்தில் வெளியாகாது என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

 

சர்ச்சையைக் கிளப்பிய காட்மேன் சீரிஸ் ஜீ 5 தளத்தில் வெளியாகாது என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் காட்மேன் என்ற வெப் சீரிஸின் டிரைலர் இணையத்தில் வெளியானது. அந்த டிரைலரில் ஒரு சாதி மக்கள் மீது அவதூறு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்த சீரிஸ் வெளியாகக் கூடாது என கண்டனங்கள் எழுந்தன. மேலும் இது சம்மந்தமாக அந்த சீரிஸின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மேல் வழக்குகளும் பதியப்பட்டன.

இந்நிலையில் அந்த சீரிஸ் எங்கள் தளத்தில் வெளியாகாது என ஜீ 5 நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக ‘எங்களுக்கு வந்த பல கருத்துகளின் காரணமாக தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாதுஎன அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News