
Cinema News
மழையால் இயக்குனரோடு கோவில் பக்கம் ஒதுங்கிய மீரா ஜாஸ்மின்… அங்கதான் சம்பவமே!..
Published on
By
2002 ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அதற்கு பிறகு பாலா என்கிற திரைப்படத்தில் நடித்தார்.
தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சேநேயா, ஜூட் போன்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி படத்தில் நடித்தார். சண்டக்கோழி திரைப்படம் மீரா ஜாஸ்மினுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
meera jasmine2
எதிர்பார்த்ததை விடவும் சண்டக்கோழி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று தந்தது. சுட்டித்தனமான ஒரு பெண்ணாக நடித்த மீரா ஜாஸ்மினின் கதாபாத்திரமும் அனைவருக்கும் பிடிக்கும் கதாபாத்திரமாக அமைந்தது.
மழைக்கு ஒதுங்கிய மீரா ஜாஸ்மின்:
அதனை தொடர்ந்து மீரா ஜாஸ்மின் பல படங்களில் நடித்தார். இதற்கு நடுவே ஒருமுறை பெரும் சர்ச்சையில் சிக்கினார் மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். அப்படி ஒருமுறை படம் நடித்துவிட்டு இயக்குனரோடு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் மீரா ஜாஸ்மின்.
அப்போது பெரும் மழை பெய்ததால் இயக்குனரும் மீரா ஜாஸ்மினும் அங்கு இருந்த இந்து கோவில் ஒன்றில் ஒதுங்கியுள்ளனர். அங்கு இருந்த சாமியை இருவரும் கும்பிட்டுள்ளனர். ஆனால் மீரா ஜாஸ்மின் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அந்த கோவிலில் வேற்று மதத்தாருக்கு அனுமதி கிடையாதாம். இதையடுத்து இந்த செய்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் மத கலவரமே நடக்கவிருந்த நிலையில் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை சரி செய்துள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த விஷயத்தை செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...