×

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போறேனா... குக்வித் கோமாளி புகழ் கனியே கொடுத்த விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகிறாரா என்பது குறித்து குக் வித் கோமாளி புகழ் கனி விளக்கம் கொடுத்திருக்கிறார். 
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போறேனா... குக்வித் கோமாளி புகழ் கனியே கொடுத்த விளக்கம்

தமிழின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், இதுவரை 4 சீசன்கள் முடிந்திருக்கின்றன. நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இவர் அரசியல் கட்சியும் நடத்தி வருவதால், தேர்தலுக்குப் பின்னர் அடுத்த சீசனைத் தொடங்க இருக்கிறார்கள். மே மாதத்தில் தேர்தல் முடிவுகள் வரும் என்பதால், அடுத்த சீசனை ஜூன் மாதத்தில் தொடங்கப் போகிறார்களாம். 

பிக்பாஸின் ஐந்தாவது சீசனில் பங்கேற்க இப்போதே சில பிரபலங்களிடம் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், குக் வித் கோமாளி புகழ் கனியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியானது. 

அந்தத் தகவல் குறித்து கனியே விளக்கம் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் கனி, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து கால் எதுவும் வரவில்லை வந்தால் நிச்சயம் ரசிகர்களிடம் பகிர்கிறேன் என்று கனி விளக்கம் கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குப் போகாதீங்க என ரசிகர்கள் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். கனி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

From around the web

Trending Videos

Tamilnadu News