CWC: டிஆர்பிக்காக ராஜிவை காப்பாற்றிய குக் வித் கோமாளி… இந்த வார எலிமினேஷனில் நடந்த பிரச்னை!
CWC: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி வரும் நிலையில் இந்த வாரம் ஒரே வார இறுதி எபிசோட்டில் செமி பைனாலே மற்றும் வைல்ட் கார்ட்டை வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடக்கத்தில் இருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்த அதே சீசன்களின் கலகலப்பை கொண்டு வந்து டிஆர்பியை தக்க வைத்து விட்டது. தற்போது இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது.
முதல் சில வாரங்கள் எல்லாம் அமைதியாக இருந்த ராஜி கடந்த சில வாரங்களாகவே தன்னுடைய காமெடி சரவெடிகளால் எபிசோட் வாரா வாரம் வைரலாக்கி வருகிறார். இதன் காரணமாகவே ராஜி தொடர்ச்சியாக சேவ் செய்யப்பட்டு வருகிறார்.
அதிலும் கடந்த சில வாரங்களாக ராஜி சரியாக சமைக்கவில்லை என நடுவர்கள் எக்கசக்கமாக நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வந்தனர். இதனால் எலிமினேட் செய்யப்பட்டு வைல்ட் கார்ட் வருவார் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், எதிர்பார்க்காத வகையில் இந்த வாரம் செமி பைனாலே நடந்து இருக்கிறது. இதில் யாரும் யோசிக்காத வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ராஜி இருவரும் வெற்றிபெற்று பைனாலே சென்று இருப்பதாக சமீபத்திய புரோமோ காட்டி இருக்கிறது.
வைல்ட் கார்டுக்கு பிரியா ராமன் மற்றும் நந்தக்குமார் இருவரும் சென்று இருக்கின்றனர். இருவருமே சமையலில் பெரிய அங்கீகாரம் பெற்ற நிலையில் அவர்களை எலிமினேட் செய்தது சரியில்லை என்றே கூறப்படுகிறது. டிஆர்பிக்காக ராஜிவை காப்பாற்றினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவாக விஜய் டிவிக்கு இதுவே வேலை என்றும் தகுந்த போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு டிஆர்பிக்கு ஒரு ஆட்டம் ஆடுவதையே செய்து வருவது ரசிகர்களை அதிருப்தியாக்கி வைத்துள்ளது.
