Connect with us

latest news

குக் வித் கோமாளி இனிமேல் இந்த சேனல்ல வரப்போகுதா?.. அதுக்குத்தான் ஒருத்தர் ஒருத்தரா எஸ்கேப் ஆனதா?..

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே டிஆர்பியில் ஓடவிட்ட ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அவங்க என்ன டிஷ் சமைக்கிறாங்க என்பதெல்லாம் ஹைலைட்டே கிடையாது. அவங்க அதை வச்சு எப்படியெல்லாம் காமெடி பண்றாங்க என்பதுதான்.

சிவாங்கி, புகழ், மணிமேகலை, மோனிஷா பிளஸி என பலர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் செய்யும் காமெடியை பார்க்கவே ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை வெகுவாக கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

குக் வித் கோமாளி இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில், 5வது சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்கப் போகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் வெஙக்டேஷ் பட் உள்ளிட்ட பலர் திடீரென விலகி விட்டனர்.

தாமுவும் வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் மட்டும் இன்னமும் இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜன் புதிய நடுவராக தாமுவுடன் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

இந்நிலையில், வெங்கடேஷ் பட் உள்ளிட்ட குக் வித் கோமாளி டீம் சன் டிவியில் புதுசா வரப்போற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரிகினல் குக் வித் கோமாளி டீமே சன் டிவியில் சேர்ந்து விட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை அசத்தப் போவது யாரு என சன் டிவி செய்தது. குக் வித் கோமாளிக்கு போட்டியாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய்சேதுபதியை வைத்து நடத்தினாலும் அந்த நிகழ்ச்சி ஓடவில்லை. இந்நிலையில், குக் வித் கோமாளி டீமை அதிக சம்பளம் கொடுத்து சன் டிவி வாங்கி விட்டதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top