Categories: Cinema News latest news

குக் வித் கோமாளி வின்னர் இவர்தான்… வெளியான ரகசிய தகவல்… மன வருத்தத்தில் ரசிகர்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் அதிக அளவு பார்த்து சிரித்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி. வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டும் கொண்டு செல்லாமல், காமெடிகளையும் வைத்து கொண்டு சென்றதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் சீசனில் வனிதா வெற்றிபெற்றார். இரண்டாவது சீசனில் கனி வெற்றிபெற்றார். இரன்டு சீசனுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்க்கு மூன்றாவது சீசனுக்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த வாரம் ஷூட்டிங் நடந்து முடிந்தது அதன்படி, இந்த இறுதி போட்டியில் தர்ஷன், சந்தோஷ், ஸ்ருதிகா, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இருந்தனர்.

இதையும் படியுங்களேன்- 48 வயதில் 2வது முறை கர்ப்பமான உலக அழகி.!? வெளியான வைரல் விடியோவால் பரபரப்பு.!?

அந்த இறுதி போட்டியில், மிகவும் சூப்பராக சமைத்து, குக் வித் கோமாளி 3 சீசனின் டைட்டிலை வென்றவர், வேறு யாருமில்லை, மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிகா தான். இவர் தான் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

என்னதான், ஸ்ருதிகா  டைட்டிலை வென்றிருந்தாலும் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால், இந்த வாரத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்தது. இன்னும் அடுத்த சீசன் துவங்க, குறைந்தது 10 மாதங்கள் ஆகும். இதனால் ரசிகர்கள் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார்.

Manikandan
Published by
Manikandan