Categories: latest news television

குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் எலிமினேஷன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் குக் வித் கோமாளி. பிரபலங்களுடன் சமையல் தெரியாத ஒருவரை கோமாளியாக இறக்கி அவர் கொடுக்கும் தொல்லைகளை சமாளித்து சமைத்து முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: வாழ்க்கை ஒரு வட்டம்டா!.. மறுபடியும் வருவேன்!.. விஜய் வசனம் பேசி அதிர வைத்த பிரசாந்த்!…

பழைய தயாரிப்பு நிறுவனமும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற  பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் குக் வித் கோமாளியை தற்போது தயாரித்து வருகிறது. இதனால் ஐந்தாவது சீசனை வெற்றி பெற செய்ய தொடர்ச்சியாக புதிய முயற்சிகளை ஒவ்வொரு வாரமும் நிறுவனமும் கையாண்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் புது கோமாளிகள் முதல் வித்தியாசமான டாஸ்க்களால் கலை கட்டியது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு எலிமினேஷனிற்கும் நான்கு வாரங்கள் எடுத்துக் கொண்டது. இதில் முதல் ஆளாக ஸ்ரீகாந்த் தேவா வெளியேறினார். தொடர்ந்து சீரியல் நடிகர் வசந்த் வசி, அடுத்ததாக ஷாலின் சோயாவும் வெளியேறி இருந்தனர்.

இதையும் படிங்க: 2வது நாளில் 2 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் இறங்கி அடிக்கும் அந்தகன்!….

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதால் எலிமினேஷனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என மாற்றி உள்ளனர். அந்த வகையில் இந்த வார டேஞ்சர் ஜோனில், பூஜா, அக்ஷய் கமல் மற்றும் இர்பான் ஆகியோர் இருந்தனர். இதில் பூஜா எலிமினேட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily