Categories: Cinema News latest news television

குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க போகுதுங்கோ!… எண்ட்ரி தர இருக்கும் சூப்பர் பிரபலங்கள்!..

Cook With Comali: தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸுக்கு பின்னர் மிகப்பெரிய ஹிட் கொடுத்த ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான அப்டேட்கள் கசிய தொடங்கி இருக்கிறது.

சமையல் ஷோவில் இப்படி ஒரு புதுமையா என வாவ் சொல்ல வைத்தது குக் வித் கோமாளி. பிரபலங்கள் போட்டியாளராக இருக்க அவருக்கு உதவி என்ற பெயரில் சமையலே தெரியாத தொல்லை கொடுக்க சிலர் கோமாளிகளா இருந்தனர். 

இதையும் படிங்க: செம கிளுகிளுப்பு.. மறுபடியும் பாக்கணும்!.. எஜமான் பட இயக்குனர் இப்படி மாறிட்டாரே!…

ஒவ்வொரு எபிசோட்டும் சிரிச்சு வயிறு வலி தரும் அளவுக்கு ஃபன்னாக அமையும். முதல் 3 சீசனிலும் வனிதா விஜயகுமார், கனி திரு, ஸ்ருதிகா அர்ஜூன் என பெண் போட்டியாளர்களே வென்றனர். கடந்த சீசனில் மைம் கோபி முதல் ஆணாக கப்பை தட்டி சென்றார். பிக்பாஸ் சீசன் 7ம் முடிந்துவிட்ட நிலையில், எப்போ குக் வித் கோமாளி சீசன் 5ஐ ஸ்டார்ட் பண்ணுவீங்க என்ற எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.

அப்படி இருக்க பிப்ரவரி 17 அல்லது மார்ச் 2ல் இந்த வருடத்தின் சீசனை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சீசனில் வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்‌ஷிதா, மாளவிகா மேனன் கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?

Published by
Shamily