தொடரும் குக் வித் கோமாளி சாபம்… 7வது சீசன் ஆரம்பமே பிரச்சனையா? ஸ்பாட்டில் என்ன தான் நடந்தது?

 
தொடரும் குக் வித் கோமாளி சாபம்… 7வது சீசன் ஆரம்பமே பிரச்சனையா? ஸ்பாட்டில் என்ன தான் நடந்தது?

Cook with comali 7: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி இரண்டு வாரம் கடந்து இருக்கும் நிலையிலே பிரச்சனை பத்தி எரிய தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்த முறை ஒரு விவகாரமான விஷயம் வெடித்து இருக்கிறது. 

ஒரு காலத்தில் தமிழ் சின்னத்திரையில் பாசிட்டிவிட்டிக்கே அடையாளமாக இருந்தது குக் வித் கோமாளி. முதல் சீசனை தாண்டி இரண்டு, மூன்று என ஒவ்வொரு சீசனுக்கும் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பிரச்சனை ஐந்தாவது சீசனில் இருந்தே வெடித்தது. 

தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அவர்களை தொடர்ந்து நடுவர் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். மீண்டும் தாமு உள்ளே வந்தார். அந்த சீசன் இந்த பரபரப்புக்கு இடையே தொடங்கி பல முகம் சுழிக்க செய்யும் காமெடிகளால் கடுப்பேற்றியது.

அதற்கு மேல் சென்று பிரியங்கா உள்ளே வந்து தன்னுடைய கிரிஞ்சுகளால் எரிச்சலடைய செய்ய அவர் கொடுத்த இம்சைகளால் என்னால் முடியாது என தொகுப்பாளினி மணிமேகலை கிளம்பினார். தொடர்ந்து பிரச்சனை பெரிதாக வெடித்தது.

இதை சரி செய்யும் விதமாக ஆறாவது சீசனை காப்பாற்ற வந்தார் ராஜூ ஜெயமோகன். ஒரு வழியாக அவருக்கே கப்பை கொடுத்து வைத்தனர். இது சமையலுக்காக இல்ல சீசன் காப்பாற்றியதற்கா என்று தான் இன்னும் தெரியவில்லை. 

இந்நிலையில் ஏழாவது சீசன் தொடங்கி இரண்டு வாரம் தொடங்கிய நிலையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நான் நிகழ்ச்சிக்கு வந்தது புகழுக்கு பிடிக்கவில்லை. என்னிடம் பேசவே இல்லை.

அவருக்கு பக்கத்தில் ஒரு ஜிம் பாய் வைத்து இருந்தார். கானா வினோத் என்னை உருவகேலி செய்தார். நான் அமைதியாக இருந்தேன். பின்னர் அவர் என் குடும்பத்தை தப்பாக பேசியதால் கோபமாகி அவருடன் சண்டைக்கு சென்றேன். அப்போ புகழ் மற்றும் கானா வினோத் அடிக்க வந்தனர்.

கீழே குடித்து கொண்டு இருந்த மாகாபா ஆனந்த் கம்பியை கொண்டு என்னை தாக்கினார். எஸ்கேவை விட மூத்த தொகுப்பாளர் ஆனால் அறிவு என்பது சுத்தமா இல்லை. டீ குடிப்பது போல சரக்கு அடித்து கொண்டு இருக்கிறார். தடுக்க வந்த நிஷா, சுனிதாவுக்கும் அடி விழுந்தது என புகார் அளித்து இருக்கிறார்.

From Around the web