Categories: Cinema News latest news

எங்களுக்கும் கஷ்டம் இருக்கு…நாங்களும் கஷ்டப்படுறோம்.. இணையத்தில் கதறிய குக் வித் கோமாளி சிவாங்கி.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக பதியப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் என்று என்பது நிதர்சனமான உண்மை. பலரது வாழ்வில் உள்ள மன உளைச்சலுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரும் மருந்தாக இருக்கிறது என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா என அனைவரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். இதில் சிவாங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் பாடகரும் கூட.

இவர் எப்போதும் இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவரை பற்றி அண்மையில் ஒரு ரசிகர் கமெண்ட் அடிதது இருந்தார். அதற்கு கூட கூலாக தனது பதிலை அனுப்பி இருந்தார். தற்போதும் கூட அதேபோல சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உங்களுக்கு என்ன ஜாலியான செலிபிரிட்டி வாழ்க்கை. எங்களுக்கு அப்படியா?  நாங்கள் மிடில்க்ளாஸ் குடும்பம். தினமும் மிகவும் கஷ்டப்படுகிறோம். என்று ஒரு ரசிகர் பதிவிட,

இதையும் படியுங்களேன் – கமல் அத கண்டிப்பா செய்யமாட்டார்.. அதுனால நான் கண்டிப்பா செய்வேன்.! லோகேஷின் பலே திட்டம்…

உடனே அதற்குரிய பதில் கூறும் விதமாக, சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ செலிபிரிட்டி வாழ்க்கை என்பது மிகவும் எளிதானது அல்ல. உங்களுக்கு எது பிடிக்கும் இது பிடிக்குமா என ஒவ்வொரு முறை சிந்தித்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் வரைதான் நாங்கள் இங்கேயே இருப்போம்.

இல்லையென்றால் நாங்கள் இங்கு இருக்க மாட்டோம். பிரச்சனை என்பது எல்லாருக்கும் இருக்கிறது. அது செலிபிரிட்டிக்கு என்று அல்ல.. செலிபிரிட்டி, நடுத்தர வர்க்கம். ஏழைகள் என அனைவருக்கும் அவர்களது வாழ்வில் பிரச்சனை இருக்கிறது. என்று தனது ஆழமான கருத்தை ஷிவாங்கி இன்ஸ்டகிரம் பதிவில் பதிவிட்டு இருந்தார்.

Manikandan
Published by
Manikandan