Cook with comali
Cookwithcomali5: தமிழ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் குறித்த அப்டேட்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது குக் வித் கோமாளி. தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன் உங்களுக்கு இருப்பதைப் போல இந்த சீசனுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எம்ஜிஆர், விஜயகாந்த் செய்யாததை விஜய் செஞ்சிருக்காரு.. ‘கோட்’ படத்தால் புகழ் மேல் புகழ்
இதனாலே, போட்டியாளர்களை ஒரு வாரத்திற்கு ஒருமுறை எலிமினேட் செய்யாமல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை தயாரிப்பு குழு எலிமினேட் செய்து வந்தது. இதனால் நிகழ்ச்சி தொடங்கி 40 வாரம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் ஆறு போட்டியாளர்கள் இந்த வாரம் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
Elimination
ஆனால் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் அதற்குள் பைனலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு குழு இருக்கிறது. இதனால் இந்த வாரம் ஒருவர் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு எலிமினேஷன்கள் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே அலப்பறையா? ரஜினிகாந்த் வில்லனை கட்டம் கட்டி தூக்கிய போலீசார்
இந்த சீசனில் ஆரம்பம் முதலே நல்ல டிஷ்களை செய்து கொடுத்து வரவேற்பை பெற்று வந்த நடிகை திவ்யா துரைசாமி முதல் எலிமினேஷன் ஆக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இவரின் வாழை திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பற்றி இருக்கும் நிலையில் மற்ற படங்களின் வாய்ப்பால் கூட இவர் வெளியேறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அடுத்த எலிமினேஷனாக பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வந்த நடிகர் விடிவி கணேஷ் வெளியேறி இருக்கிறார். இவருக்குதான் குக் வித் கோமாளி போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. பைனல் நெருங்குவதால் இனி கண்டெண்ட் கொடுப்பவர்களை சேவ் செய்ய வேண்டியது அவசியமில்லாததால் இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…