×

குக் வித் கோமாளி பிரபலத்தை உருவ கேலி செய்த காமெடியன்: இதெல்லாம்  நியாயமா? 

உருவக்கேலி குறித்து பிரபல நடிகை தெரிவித்துள்ள கருத்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
 
cook with komali

தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர் என்றால் அது சின்னத்திரை நடிகை தீபா அக்கா தான். தனது வெகுளியான பேச்சு மூலமும், குழந்தைத்தனமான செயலாலும் அனைத்து ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார். இவரது பேச்சில் கிராமத்து மணம் வீசும். இவரது எதார்த்தமான செய்கைகளால் இவரை பிடிக்காத நபர்களே இல்லை. அந்த அளவிற்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர குறும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

cook with komali deepa
cook with komali deepa

இந்நிலையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் தீபாவின் உருவத்தை கேலி செய்யும் விதமாக காமெடி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தீபா மிகவும் வேதனையுடன் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்பது போன்ற புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய தீபா, "நாங்களும் ஒல்லியாக இருந்தவர்கள் தான். இப்போ எப்படி குண்டாகினோம்னு யோசிச்சு பாத்தீங்களா? நாங்க உயிரைக் கொடுத்த சாமி. இரண்டு உயிரை கொடுத்து உங்கள் வம்சத்தை தழைக்க வைத்திருக்கிற தாய். தாய் வடிவத்தைப் பார்த்து எப்படி அப்படி நீ சொல்லலாம்? நீ வீட்டுக்கு போகும்போது உன் அம்மா எதிர் பார்த்துட்டு இருப்பாங்க. அதே மாதிரி தான் என்ன எதிர்பார்த்து இரண்டு குழந்தைங்க காத்துட்டு இருக்கு. அதனால ஒருத்தரை உருவ கேலி பண்ணாதீங்க" என பேசியுள்ளார்.

cook with komali deepa
cook with komali deepa

இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் பால சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை. இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே.. தலைவணங்குகிறேன் தாயே" என குறிப்பிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News