அசிங்கப்படுத்திறீங்க.... சிங்கப்பெண் சீருடையில் கொந்தளித்த கூல் சுரேஷ்!

 
cool suresh

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் கூல் சுரேஷ். இவர் 2000 காலகட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கூட்டத்தில் ஒருத்தராக இவரை பல படங்களில் பல காட்சிகளில் பார்க்க முடியும்.

அப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து வெளிப்படையாக தைரியமாக கருத்துக்களை தெரிவிக்கும் நபர் தான் கூல் சுரேஷ் அது மட்டும் இல்லாமல் வெளிவரும் புதிய திரைப்படங்களுக்கு அந்த படத்தின் ஹீரோவின் கதா பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு திரைப்படங்களுக்கு சென்று திரைப்படங்களை பார்த்து அதை மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆக்குபவர் .

அதே வகையில் "ஆட்டி" படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சிங்கப்பெண் சீருடை அணிந்து வந்து லேடி கெட்டப்பில் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அதைப் பார்த்த நிருபர்கள் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவான சிங்கப்பின் அதிரடிப்படை சீருடையை ஒரு ஆண் அணிந்து வந்து அவமதிப்பது சரியா? என கேள்வி எழுப்பினார்கள் .

cool suresh

படத்தின் விளம்பரத்திற்காக இப்படி இழிவுபடுத்தலாமா எனக் கூல் சுரேஷை விமர்சித்தனர். இந்த கேள்விகளால் கடுப்பான கூல் சுரேஷ் ஆக்ரோஷமாக வாதாட தொடங்கி இது எப்படி இழிவுபடுத்துவது ஆகும் நான் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தான் இந்த உடை அணிந்து வந்துள்ளேன்.  

உங்களைப் போன்ற ஆட்கள்தான் ஒரு நல்ல விஷயம் செய்தாலும் அதை மாற்றி மாற்றி பேசி நாட்டை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறீர்கள். நான் கத்தி எடுக்கிறேன் என்றால் அது ஆப்பிள் ஆரஞ்சு பழத்தை வெட்டுவதற்காக தான் இருக்கும். ஆனால் நீங்கள் நான் கழுத்தை வெட்டுவதற்காக கத்தி எடுத்தேன் என்று எப்படி சொல்ல முடியும் என சரமாரியாக பதிலடி கொடுத்தார் கூல் சுரேஷ். எனினும் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி நடந்திருக்கக் கூடாது என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Tags

From Around the web