
Cinema News
உதவி செய்வதோ சந்தானம்…சிம்புவுக்கு மட்டும் புரோமோஷனா?..வாய்விட்டு மாட்டிக்கொண்ட கூல் சுரேஷ்..
Published on
“காக்க காக்க”, “தேவதையை கண்டேன்”, “படிக்காதவன்” என பல திரைப்படங்களில் சிறு சிறு ரவுடி கதாப்பாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். அதுமட்டுமல்லாது சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட “பிஸ்கோத்”, “தேள்” போன்ற திரைப்படங்களில் கூல் சுரேஷ் நடித்திருந்தார்.
சிம்பு நடிப்பில் வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோதே கூல் சுரேஷ் அத்திரைப்படத்திற்கான மறைமுக புரோமோஷன் பணியைத் தொடங்கிவிட்டார். “வெந்து தணிந்தது காடு, சிம்பு வரார் வழியவிடு” என்று ஒரு முறை இவர் ஒரு திரையரங்கில் கூறியதில் இருந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானார்.
அதன் பின் எந்த திரைப்படம் வெளிவந்தாலும் முதல் ஷோ படம் பார்க்க திரையரங்கிற்கு செல்லும் இவரிடம் மீடியாக்கள் குவிந்தனர். தான் பார்த்த திரைப்படங்களை பற்றி கூறும்போதெல்லாம் “வெந்து தணிந்தது காடு” என்றவாறே பேசத் தொடங்குவார். சமூக வலைத்தளங்களில் இது மிகவும் வைரல் ஆகின.
கடந்த 15 ஆம் தேதி “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெளியான பின், இனி அவ்வாறு பேசப்போவதில்லை என கூல் சுரேஷ் முடிவெடுத்ததாக சில தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கூல் சுரேஷிடம் “உங்களது வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்?” என நிருபர் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த கூல் சுரேஷ் “என்னுடைய நண்பர் சந்தானம் தான் என்னை கவனித்துக்கொள்கிறார். அதை நான் பல இடங்களில் கூறியிருக்கிறேன்” என கூறினார்.
மேலும் “இன்று வரை என்னை அன்பாக பார்த்துக்கொள்பவர் சந்தானம் தான். அதை பெருமையாக கூறுவேன்” எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் “அப்புரம் ஏன் சிம்புவுக்கு புரோமோட் செய்கிறீர்கள்/” என கூல் சுரேஷை விமர்சித்து வருகின்றனர்.
தன்னை சிம்புவின் மிகப்பெரிய ரசிகன் என எப்போதும் கூறிக்கொண்டிருந்தாலும் தற்போது வரை தன்னை கவனித்துக்கொள்வது சந்தானம் தான் என கூல் சுரேஷே ஓப்பனாக கூறியுள்ளது சற்று ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...