Connect with us

Bigg Boss

தமிழ்நாட்டுல இருக்கவே உனக்கு தகுதியில்லை!.. விசித்ராவை நாக்கை புடுங்குற மாதிரி கேட்ட கூல் சுரேஷ்!..

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானா ஆண்டி என்பது போல விசித்ரா இதுவரை கூலாக இருந்த சுரேஷை சூறாவளியாக மாற்றி விட்டார். எத்தனை நாளைக்குத் தான் நானும் நடிக்கிறது என சிம்பு ஸ்டைலில் கூல் சுரேஷ் தனது நிஜ முகத்தை கட்டவிழ்த்து விசித்ராவை சும்மா வச்சு செய்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதியில்லை என்றும் அம்மா அம்மான்னு சொல்லி ஏமாத்துறீங்க, நேத்து நைட் சும்மா போனவனை கூப்பிட்டு உன் கதையை சொல்லு என பாவப்படுவது போல பேசி, கதையை கேட்டுக் கொண்டு தற்போது அதை வைத்தே நாமினேட் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் இதற்கு பெயர் பச்சோந்தி தனம் என்றும் விசித்ரா ஒரு சரியான பச்சோந்தி என தனது மனதில் உள்ள பாரம் எல்லாம் இறங்கும் வகையில் ஒட்டுமொத்தமாக கொட்டித் தீர்த்து பழைய துணியை மடித்து அவருக்கு எதிரான தனது குரலை பதிவு செய்துள்ளார் கூல் சுரேஷ்.

இதையும் படிங்க: அவர் முன்னாடி ஹாலிவுட் நடிகர்லாம் சும்மா!.. சிவாஜியே பாராட்டிய நடிகர் யார் தெரியுமா?..

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போது  போட்டியாளராக உள்ளே நுழைந்த கூல் சுரேஷ் சில வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க மாட்டார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், 60 நாட்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இத்தனை வாரங்கள் தாக்குப் பிடித்துள்ளார்.

இந்த வாரம் நாமினேஷனில் இடம்பிடித்துள்ள கூல் சுரேஷ் இந்த வாரத்தை கடப்பாரா? அல்லது விசித்ராவை எதிர்த்து பேசியதால் வெளியே அனுப்பப்படுவாரா? என்பதை காத்திருந்து காண ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இதையும் படிங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top