ஜெயிலர் செண்டிமெண்டை கையில் எடுக்கும் லோகேஷ்.. அப்போ கல்லா கட்டுமா கூலி

by Rohini |
coolie
X

கடுப்படைந்த ரஜினி:சமீபத்தில் ரஜினியை விமான நிலையத்தில் சந்தித்த பத்திரிக்கையாளர்கள் அவருக்கு பிடிக்காத கேள்வியை கேட்டு மிகவும் எரிச்சலுக்கு உட்படுத்தினர். ஏற்கனவே அரசியல் பற்றி என்னிடம் கேள்விகளை கேட்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் மீண்டும் அரசியல் சம்பந்தமான கேள்விகளை கேட்டு ரஜினியை கடுப்படைய வைத்தனர் பத்திரிக்கையாளர்கள்.

தாய்லாந்த் புறப்பட்ட ரஜினி:அன்று கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார் ரஜினி. அப்போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து அவரிடம் சில கேள்விகளை கேட்டனர். கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க 13ம் தேதி அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறதாம்.

விறுவிறுப்பில் கூலி:13 லிருந்து 28ஆம் தேதி வரை முழுமூச்சாக படப்பிடிப்பு நடக்கப் போவதாக தெரிகிறது .அதன் பிறகு தன்னுடைய யூனிட் ஆட்களை அடுத்த ஸ்கெடியூலுக்காக லொக்கேஷன் பார்க்க சொல்லி இருக்கிறாராம் லோகேஷ். விரைவில் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் லோகேஷ் முழுமூச்சாக இறங்கி இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணம் ஆகஸ்டு மாதம் எப்படியாவது கூலி திரைப்படத்தை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் இருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது.

இப்படி ஒரு செண்டிமெண்ட்:அது ஏன் குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் கூலி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார் லோகேஷ் என்ற கேள்வி எல்லோருக்கும் எழலாம். அதே ஆகஸ்ட் மாதம் தான் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது. அந்த ஒரு சென்டிமெண்ட் தான் லோகேஷ் கூலி திரைப்படத்தையும் ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிடலாம் என நினைக்க வைத்து இருக்கிறது என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

சென்டிமென்ட் ஒரு பக்கம் இருந்தாலும் லோகேஷ் மற்றும் ரஜினி காம்போ என்றாலே அது ஒரு தனி வைப்தான். அதற்கே கல்லாவில் காசு கட்டும். இதில் சென்டிமென்ட் வேற லோகேஷ் பார்க்கிறாரா என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் லியோவுக்கு இப்படித்தான் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசியில் அந்த படத்தின் நிலைமை என்ன ஆனது என அனைவருக்கும் தெரியும் .அதனால் கூலி திரைப்படத்தின் ரிசல்ட்டையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story