
Cinema News
கூலிக்கு குறையும் வசூல்!.. கலாநிதி மாறன் எடுத்த முடிவு!.. இத முன்னயே செஞ்சிருக்கலாம்!..
Coolie: ஒரு திரைப்படத்திற்கு சென்சார் போர்டு கொடுக்கும் சான்றிதழ் என்பது மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் மூன்று விதமான சான்றிதழ்களை கொடுப்பார்கள். U என்றால் முழுக்க முழுக்க, கொஞ்சம் கூட வன்முறை இல்லாத, சண்டை காட்சிகள் இல்லாத திரைப்படம். U/A என்றால் குடும்பத்துடனும் பார்க்கலாம். அதேநேரம் கொஞ்சம் சண்டை மற்றும் வன்முறை காட்சிகளும், கிளாமர் பாடல்களும் இருக்கலாம்.
A சர்டிபிகேட் கொடுத்து விட்டால் 18 வயதினருக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதுதான் விதி. அதனால்தான் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களுக்கு U/A சர்டிபிகேட் கிடைக்கும். ஆனால் கூலி திரைப்படத்திற்கு A சர்டிபிகேட் கொடுத்தார்கள்.
ரஜினி நடித்த படத்தில் கடைசியாக சிவா படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதன்பின் 35 வருடங்கள் கழித்து இப்போது கூலி படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜும், கலாநிதி மாறனும் இதை சீரியஸா எடுத்துக் கொள்ளவில்லை ரஜினி படம்தானே.. மக்கள் வருவார்கள் என நினைத்து விட்டார்களோ என்னவோ!..

சாதாரண தியேட்டர்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் படம் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் PVR, INOX உள்ளிட்ட மால்களிலும், பெரிய தியேட்டர்களிலும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கூலி படம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த பல ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். அதுவும் வெளிநாட்டில் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து போனது. எனவே இந்த A சர்டிபிகேட் கூலி படத்தின் வசூலை பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட மகளை அழைத்துக் கொண்டு கூலி படம் பார்க்க வந்த ஒருவர் தியேட்டரில் அனுமதிக்குமாறு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
கூலிக்கு A சர்டிபிகேட் கிடைத்ததும் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் ரஜினி இதை கண்டு கொள்ளவில்லை. தற்போது இது பிரச்சனைகளை உருவாக்கி வருவதாலும், வசூலை பாதிப்பதாலும் கூலி படத்தை மீண்டும் சென்சருக்கு அனுப்பி U/A சான்றிதழை வாங்கும் முயற்சியில் கலாநிதி மாறன் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் U/A சான்றிதழுடன் கூலி படத்தை திரையிடுவார்கள். இதனால் குழந்தைகளும் படம் பார்க்க வருவார்கள். எனவே வசூல் அதிகரிக்கும் என கணக்கு போடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இதை முன்பே செய்திருந்தால் கண்டிப்பாக இந்த படம் இந்நேரம் 500 கோடி வசூலை தாண்டி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.