vijay
குடியிருந்த கோயில், ராஜதுரை, தங்கப்பதக்கம், வால்டர் வெற்றிவேல், ஜெயிலர் என பல படங்களின் குறியீடுகள் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் வந்துருக்கு.
எஸ்ஏ.சந்திரசேகர் 30 ஆண்டுகளுக்கு முன்னாடி எடுத்த படம் ராஜதுரை. ஆனா கிட்டத்தட்ட அதே கதை தான் கோட். தந்தை எடுத்த கதையையே அவரோட பையன்கிட்ட ஓகே வாங்கி இருக்காருன்னா வெங்கட்பிரபு தான் பலே கில்லாடி. கண்டிப்பா எஸ்ஏசி கதையைக் கேட்டுருக்க மாட்டாரு. கேட்டுருந்தா இது நான் எடுத்த கதை தான்னு சொல்லியிருப்பாரு.
அவங்க ஆல்ரெடி எடுத்த சரக்கை இவர் புது சரக்கு மாதிரி எடுத்துருக்காரு. இது மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம். 50 வயது நிரம்பிய விஜய்க்குத் தெரியாதா? ஏன்னா இந்தப் படம் வரும்போது விஜய்க்கு 23 வயசு இருக்கும். அந்த வயசுல தன்னோட சொந்த அப்பா எடுத்த படத்தோட கதை தெரியாமலா இருக்கும்? என்னன்னு தெரியல. ஒருவேளை வேற வேற மாதிரி ஏமாற்றிட்டாரான்னு தெரியல. இது வேற லெவல்னு சொல்லி பில்டப் காட்டி வெங்கட்பிரபு ஏமாற்றிட்டாரா?
Also read: ஒரே படத்துல ரஜினி, அஜீத் ரசிகர்களைக் கொண்டாட வைத்த விஜய்… தலைவருன்னா சும்மாவா!
எஸ்ஏசி, விஜய், பிரேமலதான்னு யாருக்கிட்ட கேட்டாலும் இதை மறுக்க மாட்டாங்க. அதே போலத் தான் குடியிருந்த கோயில் படமும். தான் அப்பாவைக் கொன்னவன்கிட்டயே தெரியாம வேலைக்குச் சேர்ந்து கடைசில உண்மையை உணர்ந்து அம்மாவையும், தம்பியையும் காப்பாத்துற மாதிரியான கதை. என்ன அவன் தெரியாத் தனமா கெட்டவங்கக்கிட்ட சேர்ந்து கடைசில உண்மையை உணர்ந்து நல்லவனாகிறான்.
அப்படித்தான் முடிப்பாங்க. ஆனா வெங்கட்பிரபு அப்படி இல்ல. கெட்டவனுக்குத் தான் முக்கியத்துவம். கெட்டவன் திருப்பித் திருப்பி ஜெயிக்கிறான். கெட்டவனுக்கு டூயட். லவ் சாங். கெட்டவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிச்சிருப்பாங்க. அந்தப் படத்துல நியாயம், அறம் இதுக்குக் கட்டுப்பட்டவனா கதாநாயகன் இருப்பான். ஹீரோ கெட்டவனா வரக்கூடாது. ஆனா விஜய் அரசியலுக்கு எல்லாம் வரப்போறாரு.
காதலியைக் கதறக் கதற கழுத்தை அறுத்துக் கொலை செஞ்சிட்டு படத்துல வில்லனா நடிச்சிருக்காரு. என்ன அரசியல் கணக்கோ புரியல. வால்டர் வெற்றிவேலும் அப்படித்தான். தம்பி கெட்டவன்னு தெரிஞ்சி கொலை செய்றாரு. ஜெய்லரும் அப்படித்தான். தங்கப்பதக்கம் தன் மகன் என்றும் பாராமல் தவறு என்று தெரிந்ததும் என்கவுண்டர் செஞ்சிருப்பாரு. அது நேர்மை, கடமையை வலியுறுத்தியது.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஹீரோயிசத்தைத் தான் பரப்புது. இதுல கெட்டவனுக்குத் தான் ஹைப் இருக்கு. பல படங்களின் கலவை தான் இது. அரசியலும் பேசி இருக்கு. முஸ்லிம் அமைப்பு பேரைச் சொல்லி குண்டு வைப்பாங்கன்னு சொல்லிருக்கு இந்தப் படம். மாநாடு படத்திலும் தீவிரவாதியை சித்தரித்து எடுத்திருப்பாரு.
goat
இவங்களுக்கு புதுசா யோசிக்கிறதுக்கு சரக்குக் கிடையாது. முஸ்லிம் தீவிரவாதின்னா ஈசியா நம்பிடுவாங்கன்னு எடுக்கிறாரு. உளவுத்துறைன்னாலே முஸ்லிம் தான் டார்கெட்.
அரசியலுக்கு வரப்போற விஜய் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் குறித்து ஏதாவது சில விஷயங்களைச் சொல்லி இருக்கலாம். கதை இன்ட்ரஸ்ட்டா இருக்கணும்கறதுக்காக இப்படியா இஸ்லாமிய அமைப்பைத் தீவிரவாதமாகவே காட்டுறாங்க. இடையில் ஒழிந்த கான்செப்ட் பீஸ்ட், கோட் மூலமா திரும்ப வந்துருக்கு.
சர்வதேச தீவிரவாதத்தை ஒழிச்சது எல்லாம் போதும். நம்ம நாட்டுல என்ன பிரச்சனை? அரசு தரப்பில் என்ன பிரச்சனை, கூலித்தொழிலாளி பிரச்சனை, நிதி கேட்டு அரசியல் கட்சிகள் போராடுறாங்க. அதை எல்லாம் எடுக்கலாம். மணிப்பூரில ல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்கள்னு சொன்னாங்களே. பான் இண்டியாவுக்காக எடுக்கலாமே. அரசியலுக்குத் தானே விஜய் வரப்போறீங்க. இன்னும் அரைச்ச மாவைத் தான் அரைக்கப் போறீங்களா?
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் ஜீவ சகாப்தன் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…