×

கொரானா விவகாரம்! ரஜினிக்கு பிறகு சிக்கிய ஸ்டாலின் : வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கொரோனா விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டரில் போட்ட ஒரு பதிவை அவரே நீக்கிய சம்பவம்  நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
 

மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் கொரானா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு. 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு. சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது’ என பதிவிட்டிருந்தார். அதன்பின் அந்த பதிவை அவர் நீக்கி விட்டார்.

நேற்று கொரோனா தொடர்பாக ரஜினி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நீக்கிய சம்பவத்தில் திமுகவினர் ரஜினியை #Fakenewsrajini என்கிற ஹேஷ்டேக்கில் கிண்டலடித்ததில் கடுப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள், இன்று #FakeNewsStalin என்கிற ஹேஷ்டேக்கில் ஸ்டாலினை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News