×

தமிழகத்தில் சமூக தொற்றாக மாறுகிறதா கொரோனா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2008 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. இன்று 55 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலையில் உயிரிழந்துள்ளார். நேற்று மட்டும் 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. இங்கிருந்து மட்டும் 300க்கும் அதிகமானவர்களுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் முதலில் யாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது என்ற விவரம் தெரிந்தாலும், அவருக்கு யாரிடம் இருந்து வந்தது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

மேலும், தற்போது கொரோனா தொற்று இருப்பவர்களில் பலருக்கும் யாரிடம் இருந்து எப்படி வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதனால், தமிழகம் மூன்றாம் கட்டமான சமூகப் பரவலில் இருக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை சில மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் வகையில் கூறினாலும், மத்திய அரசோ, மாநில அரசோ ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News