×

கொரோனா எதிரொலி - அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பும் 2 லட்சம் பேர்

அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் நபர்கள் H-1B விசா வைத்துள்ளனர். இந்த விசாவை வைத்துக்கொண்டு 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும். அதன்பின் தாயகம் திரும்பி விட வேண்டும். அமெரிக்க குடியுரிமை கோரும் நபர்களுக்கு முதலில் H- 1B விசாவே கொடுக்கப்படும். இதுதான் அந்நாட்டு சட்டமாகும்.
 

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே,அமெரிக்க குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் அங்கு இந்த விசாவில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது கொரோனா காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்று வேலையை தேட முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். மேலும் 60 நாட்களுக்கு மேலும் கால நீட்டிப்பிற்கும் அனுமதி கோரமுடியாத நிலை உள்ளது. ஏற்கனவே சுமார் 40 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்னும் 20 நாட்கள் இந்த நிலை நீடித்தால் 2 லட்சம் பேர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். 

அதே நேரம் விமான சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் எப்படி திரும்புவார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News