×

8 முறை தங்கம் வென்ற வீரருக்கு கொரோனாவா? அவரே வெளியிட்ட வீடியோ!

ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரான உசேன் போல்ட்டுக்கு கொரோனா என்று செய்தி பரவியதை அடுத்து இப்போது அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
 

ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரான உசேன் போல்ட்டுக்கு கொரோனா என்று செய்தி பரவியதை அடுத்து இப்போது அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரான உசேன் போல்ட் உலகின் மிக வேகமான மனிதர் என்று அழைக்கப்படுபவர். இவர் சமீபத்தில் தனது 34 ஆவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார். அதில் கலந்துகொண்ட பலரும் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தனர். இதனால் போல்ட்டுக்கு கண்டனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் அவருக்கு கொரோனா என்று இணையத்தில் செய்திகள் பரவின.

இதையடுத்து உசேன் போல்ட்  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்  ’எல்லோரும் எனக்கு கொரோனா எனக் கூறியதால் நான் சோதனை மேற்கொண்டுள்ளேன். என்னால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் ‘ எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News