×

கொரோனா நிவாரண நிதி... ரூபாய் 1 லட்சம் வழங்கிய நிதி அகர்வால், ஜஸ்வர்யா ராஜேஷ்!!!

கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக இதுவரை நடிகர்கள் மட்டுமே கொடுத்து வந்த நிலையில் தற்போது நடிகைகள் தங்களது பங்களிப்பை தொடங்கி வைத்துள்ளார்.

 
nidhi-agarwal2 (1)

கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக இதுவரை நடிகர்கள் மட்டுமே கொடுத்து வந்த நிலையில் தற்போது நடிகைகள் தங்களது பங்களிப்பை தொடங்கி வைத்துள்ளார்.

சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை நிதிஅகர்வால் தனது பங்காக கொரோனா நிவாரண நிதி ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அகர்வால் ரூபாய் ஒரு லட்சம் வழங்கியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதனையடுத்த தற்போது நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதித்து ரூபாய் 1 லட்சம் வழங்கியுள்ளார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்களில் நடித்து முன்னனி நடிகையானார். காக்கா முட்டை படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற இவர் தற்போது நிதி வழங்கியிருப்பது பாராட்டுக்குறியதாக உள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News