×

கொரோனா பாதிப்பு - சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் உதவியளித்த ரஜினி

கொரானா அச்சம் காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

எனவே, அவர்களுக்கு நடிகர், நடிகைககள் உதவ முன் வரவேண்டும் என ஃபெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். தைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே ரூ.10 லட்சம் உதவி செய்துள்ளனர். 

இந்நிலையில், நடிகர் ரஜினி ரூ.50 லட்சத்தை கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News