×

கிருஷ்ணகிரியில் கொரோனா... பறிபோகும் பச்சை மண்டலம்!

பச்சை வண்ணப் பட்டியலிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு வண்ணப் பட்டியலுக்கு மாற உள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் பச்சை வண்ண பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தற்போதும் அங்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்தாலும் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் பட்டியலும் அதிகரித்து வருகிறது. புதிதாக வரும் பாதிப்புகள் மிக அதிக அளவில் சென்னையிலேயே வருகின்றன. பிற மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லி அருகே நல்லூரைச் சேர்ந்த 74 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்குச் சென்று திரும்பியுள்ளார்.

இதனால் அவருடன் வந்த மூன்று பேர், உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News