×

தமிழகத்தில் கொரோனா ; கண்காணிப்பில் 2635 பேர்  : பீதியில் பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 162 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தமாக 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள் மூலமாக இந்நோய் தமிழகத்திலும் பரவி வருகிறது.  தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்படு கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 28 நாட்கள் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

அதோடு, 24 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சென்னையை சார்ந்தவர்களே அதிகம் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 935 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சோதனைக்கு பின் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. 

From around the web

Trending Videos

Tamilnadu News