×

குட்டிக்கதை பாடலில் கொரோனா - யாராவது கவனித்தீர்களா?

மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலில் கொரோனா என்கிற வார்த்தை இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

சீனாவில் உருவான வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் கேரளா,  உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 9 பேர் இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற குட்டிக்கதை பாடல் தொடர்பான வீடியோவில் கொரோனா என்கிற வார்த்தை இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா விவகாரம் தற்போதுதான் பூதாகரம் ஆகியுள்ளது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியான அப்பாடலில் கொரோனா என்கிற வார்த்தை இடம் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News