×

பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரொனா தொற்று உறுதி!

பாகுபலி1 மற்றும் 2 ஆகிய பாகங்களின் மூலம் மூலம் இந்திய அளவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி.  அந்த படத்திற்கு பின் உலக புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவாராக பார்க்கப்பட்டார். தென்னிந்திய சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படும் ராஜமௌலி தற்ப்போது RRR படத்தை இயக்கி வருகிறார்.

 

இந்நிலையில் ராஜமௌலி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பணக்காரர்கள், ஏழைகள் , பிரபலங்கள் என பாகுபாடு இன்றி பரவி வருகிறது.ஆம் , இயக்குநர் ராஜமௌலிக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. எனவே நாங்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவு வந்ததில் எங்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது. ஊடனடியாக மருத்துவரின் அறிவுரைப் படி எங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம். கொரொனா தொற்று சரியானதும் நாங்கள் பிளாஸ்மா செய்யவுள்ளோம் என நம்பிக்கையுடன் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News