×

தமிழகத்தில் மேலும் இருவருக்குக் கொரோனா – அமைச்சர் டிவிட் !

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் தங்களை சமூகவிலக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி, சீனா மற்றும் ஈரான் ஆகியவை உள்ளன. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு நேற்று முன் தினம் 7 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் டிவிட்டர் பக்கத்தில்  ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News