×

கொரோனா பீதி! பொதுத்தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்கள்? : என்னவாகும் எதிர்காலம்?

கொரோனா அச்சம் காரணமாக 34 ஆயிரம் மாணவர்கள் நேற்று பொதுத்தேர்வை எழுத வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கொரோனா வைரஸ் இந்தியாவில் 500 பேருக்கு மேல் பாதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வின் இறுதித்தேர்வு நடைபெற்றது. கொரோனா அச்சம் தொடர்பாக 34 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிர தன்மையை அறிந்து +1, +2 க்கான தேர்வை ஒத்திவையுங்கள் என தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. வெறும் 34000 மாணவர்கள் அல்ல, 34000 வருங்கால தலைமுறையினரை அழித்து விட்டீர்கள் என தமிழக அரசை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

ஒரு பக்கம் கொரோனா பீதி மற்றும் கொரோனா விடுமுறை காரணமாக அனைவரும் தேர்ச்சி செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News