×

கொரானா பீதி! பொருள் வாங்க இப்படித்தான் நிக்கணும் -  வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் 500 பேருக்கு மேல் பாதித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

எனவே, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும், கூட்டமாக கூடாமல் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுகொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஒரு கடையில் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஒரு வட்டத்திற்குள் தள்ளி தள்ளி இடைவெளிவிட்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி துணை ஆளுநர் கிரண் பேடியும் இப்புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதை பாராட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News