×

எஸ் பி பிக்கு இவர் மூலமாகதான் கொரோனா பரவியது – வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் உண்மையா?

பிரபல பாடகர் எஸ் பி பிக்கு தெலுங்கு பாடகி மாளவிகா மூலமாக கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

பிரபல பாடகர் எஸ் பி பிக்கு தெலுங்கு பாடகி மாளவிகா மூலமாக கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கும் எஸ் பி பியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதையடுத்து பலரும் அவர் மீண்டுவர வேண்டும் என பிராத்தனை செய்து வரும் நிலையில் இப்போது எஸ்பிபிக்கு எப்படி கொரோனா பரவியது என்று ஒரு தகவல் வாட்ஸ் ஆப்பில் உலாவர ஆரம்பித்துள்ளது.

அதில் ’அவருக்கு தெலுங்கு பாடகியான மாளவிகா என்பவர் மூலமாகதான் கொரோனா பரவியது . ஏனென்றால் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டனர். அதே போல மாளவிகாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.’ என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள மாளவிகா, தன் வீடியோவில் ‘எஸ் பி பிக்கு கொரோனா என்று செய்தி வந்த பின்னர்தான் தானும் சோதனை செய்துகொண்டோம். அப்போதுதான் பாஸிட்டிவ் என முடிவு வந்து சிகிச்சையில் குணமாகியுள்ளேன். இப்போது என் பெற்றோருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்ததால் சிகிச்சையில் உள்ளார்கள். நாங்கள் கடினமான காலத்தில் உள்ளோம். இதுபொன்ற தவறான செய்திகளை வெளியிடாதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News