×

சிக்கனை சீப்பாக்கிய கொரோனா! கொக்கரக்கோ... முட்டைக்கும் ஆபத்து!

கொரோனா பீதியால் சென்னையில் சிக்கன் விலை கிலோவுக்கு 36 ரூபாயாகக் குறைந்துள்ளது. விலை குறைந்திருந்தாலும் சிக்கன் விற்பனை மிக மந்தமாகவே இருக்கிறது. முட்டை விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்; 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகத்திலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, கொரோனா தொடர்பான வதந்தியால் சிக்கன் விற்பனையும் முட்டை விற்பனையும் முடங்கியுள்ளது. சிக்கன் மூலமாக கொரோனா பரவுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனால் சிக்கன் வாங்குவதைப் பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். சிக்கனுக்கான தேவை குறைந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாகவே சிக்கன் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News