×

நடிகை தமன்னா பெற்றோர்களுக்கு கொரோனா!

உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவி சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைத்துறையில் அமிதாப் பச்சன் குடும்பம் முதல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  , கருணாஸ் உள்ளிட்ட பலருக்கும் தொற்று பரவி சிலர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 

இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா தனது சமூக வலைதள பக்கத்தில் "தனது பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று என உறுதியாகி உள்ளது! அவர்கள் உடல்நிலை தேறிக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 மேலும், வீட்டில் இருந்த மற்றவர்களை பரிசோதித்து பார்க்கையில் அவர்களுக்கு நெட்டிவ் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் தமன்னாவின் பெற்றோர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறி ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News