×

RJ பாலாஜியின் அம்மாவிற்கு கொரோனா - அதிர்ச்சி  தகவல்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக அசத்தி வந்த ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக களமிறங்கிய படம் ‘எல்.கே.ஜி’ (LKG). இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கியிருந்தார். அரசியல் கதைக்களம் கொண்ட இப்படம் ஆர்.ஜே.பாலாஜியின் திரைப்பயணத்தில் ஆரம்ப வெற்றியாக அமைந்தது.

 

தனது கேரியரை ஆர் ஜே வாக பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்த பாலாஜி புகழ் , வடகறி, இவன் வேற மாதிரி, கடவுள் இருக்கான் குமாரு, நானும் ரௌடிதான் போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை அமிஞ்சுக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. RJ பாலாஜி நயன்தாராவை வைத்து தற்ப்போது மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News