×

மறைந்த நடிகரின் தம்பிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா...!

நடிகர் அர்ஜுனின் அக்கா மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பில் இருந்தே இன்னும் மீண்டு வராத அவரது குடும்பத்தில் மேலும் ஒரு சோகம் நடந்தேறியுள்ளது.

 

ஆம், மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியும் கன்னட நடிகருமான  துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோானா தொற்று பாதித்துள்ளதாம். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  ''எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள், போதுமான வரையில் பாதுகாப்புடன் இருங்கள், யாரும் பயப்பட வேண்டாம்." என பதிவிட்டுள்ளார்.

நடிகர் துருவ் சர்ஜா தனது சிறு வயது தோழியான பிரேரானா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 9ம்தேதி திருமணம் செய்துக் கொண்டார். இவர் தற்ப்போது ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்துள்ள "பொகரு" படம் திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும், அந்த பாடல்கள் சர்ச்சைக்குள்ளாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News