×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி - மருத்துவமனையில்  அனுமதி

 

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறைந்த பாடில்லை. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 5.52 லட்சம் பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8947 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ஆர்.எஸ்.பாரதி ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். தற்போது ஆர்.எஸ்.பாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே பீதியை ஏற்படுத்த்யுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News