×

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு - தொண்டர்கள் அதிர்ச்சி

 

சீனா நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கு பரவி கோடிக்கணக்கான மக்களை தாக்கி வருகிறது. சாதாரணம் மக்கள் முதல் பெரிய அரசியல்வாதிகள், நட்சத்திர நடிகர்கள் உட்பட்ட பலரும் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து  குணமடைந்துள்ளனர். அமிதாப் பச்சன்,  அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய், எஸ். பி.பி , நடிகர் கருணாஸ் உட்பட பலரும் பாதிக்கப்பட்டவர்கள் தான்.
தமிழக அரசியல்வாதிகளை பொறுத்தவரை 25க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் பலரும் சிகிச்சை முடிந்து குணமாகிவிட்டனர்.

இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அவரின் குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News